காதலின் மீதியோ நீ-26

காதலின் மீதியோ நீ-26

காதலின் மீதியோ நீ-26

நித்ரா அதன்பின் இரண்டு நாளாக ஆபிஸிற்குச் செல்லவில்லை!

மித்ரா ஆபிஸ் போயிட்டு வந்து தனத்திடம் பேசிட்டிருக்க தனம்தான்”அவளுக்கென்ன அவ ராசாத்தி மாதிரி இருக்கா. அந்தப்பையனைப் பத்தி ஒரு கவலையும் பட மாட்டேங்குறா. எனக்கென்ன வந்தது கல்யாணம் முடிஞ்சுச்சு அவன விட்டு விலகி வந்தாச்சு. வேலைக்கு போறதும் வர்றதும் இப்படியே இருக்காள். அவள் நாளைக்கு பெத்து எடுக்க போற பிள்ளைக்கு தகப்பன் வேணுமா? வேண்டாமா? அதையெல்லாம் இவ யோசிச்சிருந்தா ஏன் இப்படி எல்லாம் ஆகப்போகுது. அந்த பையன்தான் ஹாஸ்பிடலில் போய் படுத்து இருக்கான் எல்லாம் நம்ம தலையெழுத்து ரெண்டு பெத்தேன். ஒன்னு நல்லா இருக்கு ஒன்னு இப்படி வந்து நிக்குது” என்று தலைல அடித்துக் கொண்டார்.

நித்ராவுக்கு புரிந்தது அம்மா நம்மளை தான் திட்டிக் கொண்டிருக்கிறார் என்று. ஆனால் எதற்காக யார் ஹாஸ்பிடல் இருக்கான்னு தெரியலையே! என்று மெதுவாக அறைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்து மித்ராவிடம் கையைசைத்து யாருக்கு? என்னாச்சு? என்று கேட்டாள்.

மித்ராவோ தங்கையைக் கோபத்தில் முறைத்து பார்த்தவன் “உன்னாலதான்டி ஆயுஷிருக்கு இவ்வளவு பிரச்சனையும் போராட்டமும்.பாவம் அவர் பாட்டுக்கு அவர் உண்டு அவர் வேலையுண்டுன்னு இருந்தாரு. அவரை காதலிக்கிறேன் போய் நின்னு அவர் வாழ்க்கையையும் கெடுத்து உன் வாழ்க்கையையும் கெடுத்துக்கிட்டு இப்போ அவரை வலிக்க வேதனைப்படுத்துற”

“என்னாச்சு?”என்று பதறிக்கேட்டாள்.

“நொன்னாச்சு. அவருக்கு என்னாச்சுன்னே தெரியலை புட் ஒத்துக்கலையா இல்லை என்ன பிரச்சனைன்னு தெரியல. ஹாஸ்பிட்டலைஸ்டு இரண்டு நாளா.பாவம் பார்த்துக்கக் கூட யாரும் இல்லபோல.அந்த தீபாதான் கூடவே இருந்துப் பார்த்துக்கிறா”

“என்னது அந்த தீபா பன்னிக்குட்டி அவனைப் பார்த்துக்கிறாளா? அதெப்படி அவ அங்க வந்தா? இந்த வெள்ளைக்கரடிக்கு இன்னும் அறிவுங்குறது வரலையே”என்று அவளை அறியாது அவன் மேலுள்ள காதலும் அதனால் வந்த பொறாமையும் வெளிப்பட்டது.

“ஆஹான் அவ்வளவு உறுத்தா பேசுறவ அங்கயே போய் அவரைப் பார்த்துக்க வேண்டியதுதானே” என்று தனம் திட்டிக் கொண்டிருந்தார்.

அவள் ஒன்றும் பேசாது அமைதியாக வெளியே போய் உட்கார்ந்திருந்தாள்.

“இவளும் வாழமாட்டாள் அந்த மனுஷனையும் வாழவிமாட்டாள் வைக்கப்போரு நாய் மாதிரியே தொல்லைப்பண்ணுவா” என்று முணுமுணுத்தவாறே அவளுக்கு சத்தமாவுகஞ்சிக் காய்ச்சிட்டு வெளியே வந்துப்பார்த்தார் நித்ராவைக் காணவில்லை.

ஐயையோ நித்ராவை ஆயுஷ் அப்பா மறுபடியும் கடத்திட்டாருன்னு தனம் கதறி எல்லோரையும் கூப்பிட்டு நித்ராவைக் காணவில்லை என்று அழுது புரண்டார்.

மோகனுக்குமே பயம்தான். ஏற்கனவே பிள்ளைகள் முதற்கொண்டு அந்த ஆளால் கடத்தப்பட்டு தானே இவ்வளவு பிரச்சினையும் வந்தது. மறுபடியும் சென்னைக்கு வந்த பிறகும் அந்த ஆளு பிரச்சனைக்கென்றே வருகிறார் இதற்கு தான் நித்ரா பயந்தாள் என்று புரிந்தது.

போலீஸிற்குப் போகலாம் என்று உடனே கிளம்பியவர்கள் ஆயுஷிற்கு போன் பண்ணினார்கள்.

அவனும் போனை எடுக்கவில்லை என்றதும் பயந்துப்போய் எங்க வீட்டுப் பெண்ணைக் காணவில்லை. அவள் மாமனார் ஜெகன்னாத் குப்தா மேலதான் சந்தேகம் என்று புகார் கொடுத்து உடனடியாக விசாரித்து அவளைக் காப்பாற்றவும் சொன்னார்கள்.

ஏற்கனவே கர்ப்பாமா இப்பவோ அப்பவோன்னு இருக்க கூடிய பொண்ணைக் கடத்திட்டுபோய் என்ன பண்ணி இருக்காங்களோ? என்று எல்லாரும் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிக் கொண்டு நித்ராவுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டிக்கொண்டனர்.

இந்த ஆயுஷ் இங்க வந்தது அவருக்கு பிடிக்காமல் மறுபடியும் நம்ம வீட்டு பொண்ண கடத்திட்டாரே! என்று பயந்தவர்கள் எங்கெங்கு தேட முடியுமோ அஙகெல்லாம் போய் தேடுவதற்கும் பெரிய பெரிய ஆட்களிடம் சொன்னார்கள்.

எப்படியாவது நித்ராவைக் கண்டுபிடித்து கொடுத்து விடுவார்கள் என்று காத்துக்கொண்டிருந்தனர்.

 ஆயுஷிற்குத் திரும்பத் திரும்ப போனில் அழைத்தும் அவன் போனை எடுக்கவில்லை என்றதும் அவன் இருக்கும் மருத்துவமனைக்கே போலீஸோடு சென்றுவிட்டனர்.

அவனுக்கும் எதுவும் ஆகிவிட்டதோ? என்றுதான் நினைத்து போலீஸோடு போனார்கள்.

அங்கே போய் பார்த்தப்பிறகுதான் உண்மை என்னவென்று தெரிந்து மொத்தக் குடும்பமும் போலிஸிடம் மன்னிப்புக் கேட்டு புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டார்கள்.

ஆயுஷிடம் விசாரித்து அவங்கப்பாவைப் பிடித்து விசாரிக்கலாம் என்று அங்கே போனால் நித்ரா அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்க எதிரே தீபா பாவமாக முழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

என்னவென்று விசாரித்த பிறகு தான் முழுத் தகவலும் வெளியே வந்தது. 

ஆயுஷ் ஹாஸ்பிட்டலில் இருக்கான் என்று நித்ரவுக்கு தெரிந்ததும் யாருக்கும் தெரியாமல் அவனைப் பார்ப்பதற்காக வந்தவள் உள்ளே வரும்போது தீபா ஆயுஷின் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறாள்.

அதைப் பார்த்ததும் வேகமாக உள்ளே வந்தவன் தீபாவை அறைந்து விட்டாள்.

 ஏன்டி எவ புருஷன் தனியா இருப்பான் காய்ச்சல் வரும் இப்படி வந்து ஊட்டி விடலாம், எப்படி வந்து பக்கத்துல உரசிக்கிட்டு இருக்கலாம்னு காத்திருந்து வருவீங்களா?

அடியேய் உனக்கு இடிச்சுக்கவும் உரசிக்கவும் என் புருஷன்தான் கிடைச்சாரோ? தள்ளி நில்லுடி என்று அவளை அறைந்தது மட்டுமில்லாது அவளைத் தள்ளியும் விட்டிருக்கிறாள்.

அதில் கீழேவிழுந்த தீபாவை நர்ஸ்தான் தூக்கிவிட்டு அவள் விழுந்ததில் அடிப்பட்ட இடத்தைத் தடவி விட்டிருந்திருக்கிறார்.

இதெல்லாம் பத்தாததுன்னு ஆயுஷின் சட்டையைப் பிடிச்சு “இழுத்து உனக்கு நான் எப்போடா விலகிப்போவேன் இன்னோருத்தியை பிடிச்சிக்கலாம்னு மனசில இருந்திருக்கு அப்படித்தானே?” என்று அவனோடு இவ்வளவு நேரமும் சண்டைப் போட்டிருக்கிறாள்.

ஒரு நிலையில் அவளை சமாளிக்க முடியாதுபோகவும் ஆயுஷ் அவளை இழுத்து வைத்து முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும்போதுதான் போலீஸோடு மொத்தக் குடுமப்மும் உள்ளே வந்தனர்.

அதைப்பார்த்து எல்லோரும் அசடு வழிய போலீஸ்காரர் கோபத்தில் திட்டிவிட்டு சென்றுவிட்டார்.

தீபா மித்ராவிடம் “மித்ரா மேடம் உங்க தங்கிச்சிக்கிட்ட சொல்லி வைங்க.ஆயுஷ் இங்க வரும்போதே அவரு பொண்டாட்டித்தான் நித்ரான்னும் அவரு யாருன்னும் எல்லாத்தையும் சொல்லிட்டார். அவரு எனக்கு ஒரு அண்ணா மாதிரி.இப்படியெல்லாம் அடிக்கூடாதுன்னு சொல்லுங்க. இந்த ஆயுஷ் அண்ணாவும் பொண்டாட்டியை கண்டதும் அவங்க என்னை அடிச்சதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத அப்பாவி மாதிரி இருக்காரு”என்று உண்மையாகவே வருத்தப்பட்டுப் பேசினாள்.

“சாரி தீபா நான் நித்ரா வந்த சந்தோசத்தில் அதையெல்லாம் கவனிக்கலை”

“உங்கப்பொண்டாட்டி பக்கத்துல இருந்தா நீங்க எதையுமே கவனிக்கமாட்டீங்கன்னு எனக்கு நல்லா அடிச்சுப் புரிய வைச்சிட்டாங்க”என்று தனது கன்னத்தைத் தடவியவாறே சொன்னாள்.

அதைக்கேட்டதும் எல்லோரும் சிரிக்க ஆயுஷ் அப்படியே சாந்தமானான்.

நித்ரா அவனது முகத்தைத் தாங்கி என்னாச்சு ஜீஜூ என்று வாஞ்சையாகக் கேட்டாள்.

“ஹ்ஹ்ம்ம் நித்ராவைக் காணவில்லன்னதும் அப்பா மேல் கேஸ் கொடுத்தீங்களே அதை நினைச்சுத்தான் வருத்தப்பட்டேன்”

“ஏன் உங்கப்பா அப்படிச் செய்தக்கூடிய ஆள்தானே இதுக்கு எதுக்கு வருத்தப்படுறீங்க ஆயுஷ்?”என்று கோபத்தில் கத்தினாள்.

“அவரு செத்து ஒருமாசமாகுது எப்படி உன்னைக் கடத்த வருவாரு?”

நித்ரா என்ன!!! என்று அநிர்ந்தாள்.

நீ இங்க வந்த அடுத்த நாளே நானும் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன் அவருக்கும் எனக்கும் பெரிய வாக்குவாதம் சண்டை பிரச்சனை என்று ஒரு வாரம் போனது.சொத்து பிரச்சனை வேற தர மாட்டேன்னு சொன்னாரு. அப்போ தனியா கம்பெனி வைக்க போறேன்னு சொன்னேன் அதுக்கு முடியாதுன்னு சொன்னாரு. அதனால் அவருமேலயே கேஸ் போட்டேன்.மனுஷன் அதை எதிர்பார்க்கலை போல. நமக்கு எதிராகவே நம்ம மகன் வந்து நிற்கிறானே என்று ஆதங்கப்பட்டார் மறுபடியும் என்கிட்ட வந்துப் பேசினார்.

நான் வெளியே வந்தது வந்ததுதான் என் மனைவிக்காக குழந்தைக்காக இப்படி ஒரு முடிவெடுத்திருக்கேன்.இதுல எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று முடிச்சிட்டேன்.

கேஸ் போட்டிருந்தது எனக்கு சாதகமாகத்தான் வரும்னு எல்லோருக்கும் தெரியும்.அப்பா செய்ததும் தெரிஞ்சுபோச்சு. இனி சமாதானம் பேசமுடியாதுன்னு தெரிஞ்சே என்னையும் கடத்தி என்கிட்ட கையெழுத்து வாங்க முயற்சிப்பண்ணினார். அது வேலைக்காலை.அப்புறம் அதுவும் என்னைக் கடத்தினது எல்லாம் அம்மாவுக்குத் தெரிஞ்சதும் அப்பாகிட்ட இருந்து பிரிஞ்சு மாமா வீட்டுக்கு வந்துட்டாங்க. அதுலயே மனுஷன் ஆடிப்போயிட்டார்.

ஸ்ட்ரோக் வந்து ஒரு மாசம் படுத்த படுக்கையில் இருந்து போனமாசம் இறந்துட்டாரு.

“ஓஓஓ அவர் செத்தபிறகுதான் என்னைப் பார்க்க வந்தீங்களா?” என்று நித்ரா அப்போதும் ஆதங்கத்தில் கேட்டாள்”

அவ்வளவுதான் தனம் ஆடிவிட்டார் ”அறிவிருக்கா குரங்கே ஒரு மனுஷன் எவ்வளவு பிரச்சனையை சந்திச்சிட்டு பாவம்போல வந்திருக்காரு கேட்கிறா பாரு கேள்வியை.நீயெல்லாம் முட்டாளாடி”என்று அடிக்கவே போய்விட்டார்.

அவரைப்பிடித்து சமாதானப் படுத்தவே கொஞ்சநேரமாகியது.

“நான் வேலையில இருக்க ஆபிஸ் நம்மளோடது பைத்தியம். இவங்க மூலமாகத்தான் உனக்கு மாப்பிள்ளைப் பார்த்து எங்கப்பா கல்யாணம் ஏற்பாடு பண்ணினது. அதுதெரியாமலே அக்காவும் தங்கச்சியும் வேலைக்கு வந்திருக்கீங்க.தீபா அப்பாவுக்கு என் டாடீதான் பைனான்சியரே. உங்களையெல்லாம் என்ன சொல்லுறதுன்னே தெரியலை! அதுக்காக நான் இங்க நடிச்சு ஏமாத்த வரலை.உண்மையாகவே சீப் இன்ஞ்சினியர் போஸ்ட்டுக்குத்தான் வந்திருக்கேன். பணம் என்னவெல்லாம் செய்யும்னு வாழ்க்கையில் நல்லபாடம் படிச்சிட்டு உன் முன்னாடி இருக்கேன்.

நாங்க மொத்தமா எங்கக் குடும்பத்துல இருந்து எல்லாத்தையும் பிரிச்சிட்டு வெளிய வந்தாச்சு! பிரீத்த்வுக்கும் ஷேர் கொடுத்தாச்சு.

இப்போ டெல்லி கம்பெனியை நான்தான் பார்த்துக்கிறேன். என் பொண்டாட்டி குழந்தைன்னு அவ எங்க இருக்காளோ அங்கயே இருக்கணும் அவக்கூடவே இருக்கணும்னு வந்திருக்கேன். அவ என்ன சொன்னாலும் இனி விலகிப்போகமாட்டேன்!போதுமா!” என்று முடித்துவிட்டான்.

நித்ரா இதுக்கு எதுவுமே பதில் சொல்லாது அமைதியாகத் தனது விரல்களை மட்டுமே பார்த்திருந்தாள்.

இதற்குமேல் அவளிடம் பேசி புரிய வைக்கிறளவுக்கு ஒருத்தருக்கும் பொறுமை இல்லை என்பதால் எல்லோருமே நாங்க வீட்டுக்குக் கிளம்புறோம். உங்க பொண்டாட்டி இருந்து உங்களைப் பார்த்துப்பா”என்றுவிட்டு போய்விட்டனர்.

பாவம் பாவப்பட்ட தான் தீபா சும்மா அடிவாங்கிட்டு போகுது.யாரு பெத்த பிள்ளையோ!

அந்த அறையில் கணவன் மனைவி இருவரும் மட்டும்தான் இருந்தனர்.

சிறுபிள்ளையாக பிடிவாதம் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் நித்ராவை சிறு புன்னகையுடன் பார்த்தான்.

அவள் எழுந்து வர்ற மாதிரி தெரியவில்லை என்றதும் அவளருகில் போய் மண்டியிட்டவன் அவளது மடியில் தலைவைத்துக் கொண்டான்.

அதற்குமேல் அவளால் அவனை விலகி நிற்கமுடியாது அவனது தலையைக் கோதிக் கொடுத்தவள் குனிந்து முத்தம் வைத்தாள்.

ஆயுஷிற்கு இதுபோதுமே அப்படியே அவளிடம் மயங்கிவிட்டான்.

அவளது வயிற்றில் முத்தமிட்டு அவளோடு சாய்ந்து கட்டிலில் படுத்திருந்தான்.

யோவ் ஜீஜூ ஹாஸ்பிட்டலயே பெட்ரூமா மாத்திட்ட,விடு இப்போ எட்ட மாசமாகிட்டு. வயிறு இடிக்குதுபாரு”என்று அவனது நெஞ்சில் சாய்ந்தவாறே அவனது மீசையைப் பிடித்து இழுத்து விளையாடிக்கொண்டிருந்தாள்.

தனது மீசையில் விளையாடும் அவளது கையைப்பிடித்துக் கடித்தவன் ஒவ்வொரு விரலாக தனது வாயிற்குள் வைத்து முத்தமிட்டு எச்சில் வைத்தான்.

ச்ச்சீ எச்சில் என்று அவனைப்போல அவளும் சொல்லவும் என்னது எச்சிலா என்று கேட்டுவிட்டு அவளது முகத்தைத் தன்பக்கமாக இழுத்து அவளது உதட்டைக் கடித்தான்.

அவளது வாயிற்குள் தனது நாக்கை நுழைத்தவன் அவளது நாக்கோடு இணைத்து எச்சில் முத்தத்தை தாராளமாகக் கொடுத்தும் எடுத்தும் புதுவித சண்டையைப் போட்டுக் கொண்டிருந்தனர்.

அவளுக்கு அவனது இந்த முத்தம்தான் புதுவித சுகத்தையே கொடுத்தது.கண்களை மூடி பின்னாக சரிந்து அவனது தலையைப்பிடித்துக்கொண்டாள்.

இதுக்குபிறகும் அவனோடு வாழமாட்டேன் விலகி இருக்கேன்னு சொன்னாளென்றால் அவன் அவளைத் கடத்திட்டே போயிடுவான்.

அந்தளவுக்கு அவளில்வாமல் வாழமுடியாது என்பதைப் புரிந்துக்கொண்டான்!

நித்ராவும் அவனுக்கு தன் காதல் தேவைப்படுவதுபோல தனக்கும் அவனது காதலும் நேசமும் தேவைப்படுகிறது.அவனது மூச்சுக்காற்று வீசும் இடத்திற்குள்ளாகத்தான் தனது ஜீவன் வாழும் உணர்ந்து கொண்டாள்.

அதுவே அவர்களை அடுத்தடுத்து வாழ்க்கைக்குள் அதுவும் காதல் வாழ்க்கைக்குள் அழகாக வழிநடத்தும்!